குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு

Aug 6 2020 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் Ahmedabad -ல் உள்ள Shrey மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயிணை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்‍கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00