நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் : நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி தகவல்

Jul 12 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நேரத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவத்தொடங்கியது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. ஆண்டுதோறும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என்றும், மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக மாநிலங்களவை தலைவர் திரு.வெங்கைய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்க வாய்ப்புள்ளதால், சமூக விலகளை பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு முன்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00