கேரளாவில் விஸ்வரூபமெடுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம் - சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி

Jul 8 2020 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தலில், கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும், ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். தப்பியோடிய அவரை, அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் தலைமை செயலர் திரு. எம்.சிவசங்கர் தான், கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்றும், இதில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாக, டெல்லியில உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00