இரண்டாவது கட்ட கொரோனா ஊரடங்கு எதிரொலி - நாடு முழுவதும் 33 ஆயிரத்து 800 கோடி வருவாயை இழந்த பணியாளர்கள்

Jul 6 2020 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவை கட்டுப்படுத்த 2வது கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 33 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது கட்டமாக ஏப்ரல் 15 முதல் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் பணியாளர்கள் சந்தித்த இழப்பு குறித்து இந்திரா காந்தி மேம்பாட்டு மையம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் 7 புள்ளி ஒன்பது கோடி பேரின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த மாநிலங்களில் வேலையிழப்பு அதிகமாக இருந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2ம் கட்ட ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் 33 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00