இந்தியா - சீனா இடையே எல்லை மோதல் நிகழ்ந்த லடாக் பகுதிக்கு பிரதமர் மோதி திடீர் பயணம் - லே பள்ளத்தாக்கில் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் நேரில் ஆய்வு

Jul 3 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவும் லடாக் எல்லையில் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று காலை திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பள்ளத்தாக்‍கு எல்லையில், இந்திய-​சீன ராணுவம் இடையே கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், கல்வான் பள்ளத்தாக்‍கு முழுவதும் தங்களுக்‍கே சொந்தம் என சீனா அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்‍க, வெளியுறவு அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. லடாக்கை ஒட்டிய எல்லைப்பகுதி நெடுகிலும், சீனா, 20 ஆயிரம் வீரர்கள் அடங்கிய 2 படைப்பிரிவை நிறுத்தியிருப்பதுடன், அப்பகுதிக்‍கு 48 மணி நேரத்திற்குள் விரைந்துவரும் வகையில், சின்சியாங் பகுதியில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய தரப்பில் தெரிவிக்‍கப்பட்ட நிலையில், பிரதமர் திரு. மோதி, இன்று காலை திடீரென லடாக்‍ சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து, முப்படை தளபதி பிபின் ராவத்துடன் நேரில் ஆய்வு செய்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00