உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - பிரபல ரவுடியை பிடிக்க காவல்துறை தீவிரம்

Jul 3 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ரவுடிகளை பிடிக்க சென்றபோது அவர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் காவல்துறை டிஎஸ்பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சந்தோஷ் சுக்லா என்பவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விகாஸ் துபே. பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவர் கான்பூர் அருகே உள்ள Bikaru என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீஸ் படை விரைந்து சென்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவேந்திர பிரசாத் தலைமையில் சென்ற போலீசார், ரவுடிகளை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பதிலுக்கு ரவுடிகளும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த மோதலில் டிஎஸ்பி தேவேந்திர பிரசாத் உட்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சில போலீசார் காயம் அடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00