நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க வாய்ப்பு - கூட்டத்தொடரை காணொலி மூலம் நடத்துவது குறித்து ஆலோசனை

Jul 2 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முழு அளவில் நடத்த வேண்டியச் சூழல் உள்ளபோதும், அப்போதைய சூழலைப் பொருத்து கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பது முடிவு செய்யப்படும். அதே நேரம், ஏராளமான அவசரச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டியுள்ளதால், கூட்டத்தொடர் வழக்கமான அளவில் நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், மழைக்கால கூட்டத்தொடரானது ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இரு கூட்டத் தொடர்களுக்கு இடையேயான கால இடைவெளி 6 மாதங்களைத் தாண்டக்கூடாது என்பதால், நிச்சயமாக செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு முன்பாக கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுவிடும் என தெரிகிறது.

மக்களவைத் தலைவா் திரு.ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான திரு. வெங்கய்ய நாயுடு ஆகியோர் இதுகுறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தொடரை காணொலி வழியில் நடத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00