சர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்

May 31 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொது இடங்களில் எச்சில் துப்‍புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்கள், அலுவலகங்கள், போக்குவரத்தை பயன்படுத்தும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - பொது இடங்களில், ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க வேண்டும் - இறுதிச் சடங்கில் 20 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் மது அருந்துவதற்கும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நிறுவனங்களில், ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை அந்தந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் - ஊழியர்கள் அவ்வப்போது கிருமி நாசினியால் கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்‍குமேல் அனுமதி அளிக்‍கக்‍கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00