தேசிய ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் - அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

May 28 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்டமாக மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 3-ம் கட்ட ஊரடங்கு, கடந்த 17-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு, 4-ம் கட்டமாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், 5-ம் கட்டமாக, தேசிய ஊரடங்கு நீட்டிக்‍கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதேநேரம், இதுகுறித்து முடிவெடுக்‍க மாநில அரசுகளுக்‍கு அதிகாரம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே, கட்டுப்பாடுகளை விதிக்கவும், தளர்வுகளை அளிக்‍கவும் அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00