வெட்டுக்கிளி படையெடுப்பால் பயிர்கள் சேதமாகும் ஆபத்து -ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்

May 28 2020 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தும் முயற்சியாக ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு அதிகரித்துள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியாவுக்குள் பல இடங்களில் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மட்டுமே வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்றும் கடந்த ஆண்டு அவற்றை பாகிஸ்தான் கட்டுப்படுத்த தவறியதால் இந்த ஆண்டு முன்னதாகவே வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 47 ஆயிரத்து 308 ஹெக்டர் பரப்பிலான பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்த ட்ரோன்களை பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறையின் அனுமதியை கோரியுள்ளதாகவும், அதன் உதவியுடன் வானில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் தற்காலிக கட்டுப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00