தெலங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு - தோல்வியில் முடிந்தது மீட்பு பணி

May 28 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் கோவர்தன் என்பவரின் 3 வயது குழந்தை சாய் வர்தன், விவசாய நிலத்தில் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று மாலை 5 மணிக்கு நடந்து சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றின் உள்ளே சிறுவன் தவறி விழுந்தான். இது குறித்து உடனடியாக காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் அங்கு பணிகளை தீவிரப்படுத்தினர். 120 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் முயற்சிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்ற போதிலும், அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00