வருகிற 1ம் தேதி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும்

May 22 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
அடுத்த மாதம் 1-ம் தேதிமுதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் இன்று முதல் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா விதிமுறைகள் தளர்வைத் தொடர்ந்து ஜுன் 1-ம் தேதிமுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், 2 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் டிக்‍கெட்டை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வரும் நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்‍க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வேதுறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட அனுமதிக்‍கப்படும் என்றும் முன்பதிவு மையங்களில் டிக்கெட்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். 279 Shramik ரயில்கள் இயக்‍கப்பட்டு, அவற்றின் மூலம் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாகவும் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00