டெல்லியில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் - உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் நடவடிக்கை

Apr 2 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி - ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற 275 பேரை போலீசார் பிடித்து, தனிமைப்படுத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி சிறப்பு போலீசார், அரசுடன் இணைந்து, அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி, கூட்டத்தில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், பங்களாதேஷை சேர்ந்த 21 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலைமறைவாக இருந்த ஏராளமானோரை, அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்து, தனிமைப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00