நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு

Mar 30 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்‍கு தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்‍கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சென்றடைகிறதா என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் திரு. சஞ்சீவ் சிங், நேரில் ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் செய்தியளார்களை சந்தித்த அவர், அனைத்து விதமான போக்‍குவரத்தும் முடக்‍கப்பட்டுள்ளதால், இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான பெட்ரோல் தேவை 20 சதவீதமும் சரிந்துள்ளதாக தெரிவித்தார். அதேநேரம், சமையல் எரிவாயு சிலிண்டர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார். மக்கள் பீதியடைந்து, உபயோகத்தில் உள்ள சிலிண்டர் காலியாகும் முன்பே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து விடுவதாகவும், இதனால், சிலிண்டர் ரீஃபில் தேவை 200 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் இருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00