மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை வரவேற்பதாக, காங்கிரஸ் கட்சி அறிவிப்பு - பிரதமரின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சோனியாகாந்தி கடிதம்

Mar 26 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாகவும், பிரதமரின் செயல்பாட்டுக்‍கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அக்‍கட்சியின் இடைக்‍காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் திரு.மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பெருந்தொற்று கொரோனாவை ஒழிக்க முயற்சிப்போம் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சவாலான, உறுதித்தன்மையில்லாத நேரத்தில் ஒவ்வொருவரும் சுயநலம் இன்றி, நாட்டின் நலனுக்காகவும், கவுரத்துக்காகவும், மனிதநேயத்துக்காகவும் எழுந்து நிற்பது அனைவரது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு சிறப்பு இடர் உதவித்தொகை வழங்கிட வேண்டும் - 21 நாட்களாக முடங்கிக்‍ கிடக்‍கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தவும், ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றத்தையும் வழங்கிடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியில் கடன் பெற்றிருக்கும் விவசாயிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோருக்கு தவணை செலுத்துவதில் சலுகை காட்ட வேண்டும் என திருமதி சோனியா காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00