புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்​குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு - பொதுமக்களுக்கு காய்கறி வழங்குவதாக கூறி கூட்டம் சேர்த்ததால் நடவடிக்கை

Mar 26 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதற்காக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்​குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த தடையை மீறி வெளியே வருபவர்கள் கடுமையாக எச்சரிக்‍கைப்பட்டு அனுப்பி வைக்‍கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் தடையை மீறி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. நாராணயசாமி எச்சரிக்‍கை விடுத்திருந்தார். இந்நிலையில், அம்மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசைச் சேர்ந்த ஜான் குமார் மீது போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவை மீறியதற்காக இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பில் உள்ள தனது இல்லம் அருகே, அவர் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்‍கு காய்கறிகள் கொண்ட பைகளை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்ததற்காக போலீசார் அவர்மீது FIR பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00