குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, டெல்லியில் நிகழ்ந்த பயங்கர மோதல் - 10 பேர் உயிரிழப்பு - கட்டுக்கடங்காத வன்முறைச் சம்பவங்களால் தலைநகரில் பதற்றம்

Feb 25 2020 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பாரதிய ஜனதா அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, டெல்லியின் வடகிழக்‍குப் பகுதியில் நேற்று நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், கலவரம் இன்றும் நீடித்தது. வன்முறையாளர்கள், டெல்லி சாலைகளில் சரமாரி கல்வீச்சு, தீ வைப்பு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடுதல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்‍கு இடையே டெல்லியின் வடகிழக்‍குப் பகுதியில் Jaffrabad, Mauipur, Bhajanpura உள்ளிட்ட இடங்களில் நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சரமாரித் தாக்‍குதலில் ஈடுபட்டனர். இந்த மோதல், வகுப்புக்‍ கலவரமாக மாறியதால், கட்டுங்கடங்காத வன்முறைகள் நிகழ்ந்தன. கலவரத்தை ஒடுக்‍கச் சென்ற காவல்துறையினர் மீது வன்முறையாளர்கள், கடும் தாக்‍குதல் நடத்தினர். வன்முறைச் சம்பவங்களில், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலைமைக்‍ காவலர் ரத்தன்லால் என்பவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 48 போலீசார் உட்பட 150-க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. வடகிழக்‍கு டெல்லியின் Gokulpuri பகுதியில் தீயணைப்புப் படையின் 2 வாகனங்கள் கலவரக்‍காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. ஆங்காங்கே வன்முறைக்‍ கும்பலைச் சேர்ந்தவர்கள் கைகளில் இரும்புக்‍ கம்பிகள், உருட்டுக்‍ கட்டைகள் மற்றும் பல ஆயுதங்களை எடுத்துக்‍ கொண்டு, பொதுமக்‍கள் மீது ஆவேசத் தாக்‍குதலில் ஈடுபட்டனர். இதனால் வடகிழக்‍கு டெல்லி, போர்க்‍களம் போல் காட்சியளித்தது. செய்தி சேகரிக்‍கச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் விரட்டியடிக்‍கப்பட்டனர்.

வடகிழக்‍கு டெல்லி முழுவதும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டன. வன்முறைக்‍ கும்பலின் வெறியாட்டத்தால், அச்சமும், பீதியும் அடைந்த பொதுமக்‍கள் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கினர். கடந்த 1984-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்திற்குப் பின்னர், தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய கலவரம் இதுதான் என டெல்லி வாழ் மக்‍கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00