ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பார்வையிட்டனர்

Feb 24 2020 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

36 மணி நேர அரசு முறை சுற்றுப்பயணமாக, முதன்மு‌றையாக இந்தியாவுக்கு வந்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, தேசத் தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அவர்கள், அதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்புக்குரிய, Moreta மைதானத்தை திறந்து வைத்து, 'நமஸ்தே ட்ரம்ப்' எனும் நிகழ்ச்சியில் பங்‍கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அதிபர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத் பயணத்தை முடித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, காதல் சின்னமாம் தாஜ்மகாலை பார்வையிட, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டனர்.

ஆக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை, உத்தர பிரதேச மாநில ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் படேல், மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை, அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா கண்டு களித்தனர்.

இதைத் தொடர்ந்து, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிட, அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், சாலை வழிப் பயணத்தை மேற்கொண்டர். அவர்களுக்கு, வழிநெடுகிலும் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாஜ்மகாலுக்கு சென்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புக்கு, அது குறித்த சிறப்புகளை, சுற்றுலா வழிகாட்டி விளக்கினார். இதன் பின்னர், தாஜ்மகால் முன்பு ட்ரம்ப் தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதே போல், அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்கா ட்ரம்ப் தனது கணவர் Jared குஷ்னருடன் புகைப்படம் எடுத்தார். தாஜ்மகாலில் நீண்ட நேரம் செலவழித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆக்ரா விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் நாளை நடைபெறும் பல நிகழ்ச்சிகளில், அதிபர் ட்ரம்ப் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் திரு. நரேந்திர மோதி - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00