இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாததால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வேண்டுகோள்

Jan 29 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் உள்ள இந்தியர்களை கரோனா வைரசிலிருந்து காப்பாற்றி, தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்‍கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படாததால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள Wuhan நகரம் மற்றும் Hubei மாகாணத்தின் இதர பகுதிகளில் இருக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றி தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம், சீன அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை, கரோனா வைரசிலிருந்து காப்பாற்றி, தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. Rajiv Gauba தலைமையில் டெல்லியில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00