ரயில் பயணிகளின் கட்டண வருவாய் 400 கோடி ரூபாய் குறைவு : சரக்கு கட்டண வருவாய் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக ரயில்வே துறை தகவல்

Jan 28 2020 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரயில் பயணிகளின் கட்டண வருவாய் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும், சரக்கு கட்டண வருவாய் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த திரு.சந்திர சேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பயணிகள் கட்டணம் மூலமாக 13 ஆயிரத்து 398 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 13 ஆயிரத்து 243 கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்த வருவாய் மேலும் சரிவடைந்து 12 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டை விட மூன்றாவது காலாண்டில் பயணிகள் கட்டண வருவாய் 399 கோடியே​44 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், மூன்றாவது காலாண்டில் சரக்கு கட்டண வருவாய் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00