மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படக் கூடாது - குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா கடும் விமர்சனம்

Jan 27 2020 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
வகுப்புவாத அமைதியை நம்பிய மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படக்கூடாது என, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. திரு. யஷ்வந்த் சின்ஹா, தனது ஆதரவாளர்களுடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி, மும்பையில் பயணத்தை தொடங்கிய அவர், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது உத்தரபிரதேசத்தை வந்தடைந்துள்ளார். காந்தி நினைவு தினமான வரும் 30-ம் தேதி டெல்லி ராஜ்காட்டில் அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. யஷ்வந்த் சின்ஹா, குடியுரிமை திருத்த சட்டம், நம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது எனத் தெரிவித்தார். மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மத்தியில் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநல செயல்களால், வகுப்புவாத அமைதியை நம்பிய மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00