நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - டெல்லியில் வரும் 30-ம் தேதி, அனைத்துக்‍ கட்சிக்‍கூட்டத்துக்கு ஏற்பாடு

Jan 27 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, அனைத்துக்‍ கட்சிக்‍ கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்​தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்​தொடரின் முதல் கட்டம், வரும் 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டம், வரும் மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வரும் 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்‍கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, அனைத்துக்‍ கட்சிக்‍ கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் பங்கேற்குமாறு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல், வரும் 31ம் தேதி மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அதன் தலைவர் திரு.வெங்கைய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, வரும் 31-ம் தேதி, பா.ஜ.க. நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00