மும்பையில் இன்று முதல் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் - அரசின் அறிவிப்பு அமலுக்கு வருகிறது

Jan 27 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று முதல் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் வர்த்தக நகரம், நுழைவு வாயில் என்றெல்லாம் சிறப்பு பெற்று விளங்குகிறது மும்பை நகரம். இங்கு ஏராளமான மால்கள், மல்டிபிளக்ஸ்கள், வணிக வாளகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தையும் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் வகையில் அம்மாநில அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று இரவு முதல் இந்த புதியமுறை அமலுக்கு வருகிறது. இதன்மூலம் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பிரபல நகரமாக விளங்கும் லண்டனில் நைட் எகானமி என்பது 5 பில்லியன் பவுண்ட் ஆக இருக்கிறது. இது அந்நாட்டு பொருளாதாரத்திற்கு பெரிதும் பயனளிக்கிறது. இதே மாதிரியான நடைமுறையை மும்பை நகரிலும் மகாராஷ்டிர மாநில அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களை தவிர்த்து பிற பகுதிகளில் இருக்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பந்திரா - குர்லா காம்பிளக்ஸ் மற்றும் நரிமன் பாயிண்ட் ஆகிய சாலைகளில் உள்ள உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு எச்சரித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் திரு. ஆதித்யா தாக்‍கரே, அரசின் இந்த நடவடிக்கை மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்புகள், வருவாய் ஈட்டும் வழிகள் ஏற்படும் என கூறியுள்ளார். அதேசமயம் மும்பை நகரின் வருவாயும் அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார். மேலும் இதனால் போலீசாரின் பணிச்சுமை அதிகரிக்காது என்றும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டால் போதுமானது என்றும் கூறினார். அதேசமயம் இரவு விடுதிகள், மதுபான விடுதிகள் வழக்கம்போல் நள்ளிரவு 1.30 மணிக்கு மூடப்பட வேண்டும். மக்கள் இனி இரவு நேரத்திலும் ஷாப்பிங் செல்லலாம் - உணவு உணவு அருந்தலாம் - இனிமையாக பொழுதை கழிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மால்கள், மல்டிபிளக்ஸ், உணவகங்கள் ஆகியவை கட்டாயம் திறந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00