மத்திய அமைச்சர்கள் 36 பேர் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் - நாட்டு மக்‍களை திசை திருப்பும் நடவடிக்‍கை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

Jan 19 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அமைச்சர்கள் 36 பேர் ஜம்முகாஷ்மீரில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம், நாட்டு மக்‍களை திசை திருப்பும் நடவடிக்‍கை என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்‍களிடையே விளக்‍கமாக எடுத்துரைப்பதற்காக முதற்கட்டமாக மத்திய அமைச்சர்கள் 36 பேர் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். ஒருவாரம் அங்கு சுற்றுப்பயணம் செய்து மக்‍கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கின்றனர். டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்‍கு இன்று பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர்களின் இந்த சுற்றுப் பயணம் மூலம், பாரதிய ஜனதா அரசு நாட்டு மக்‍களையும், உலக மக்‍களையும் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எங்கோ ஒர் இடத்தில் இருக்‍கும் மக்‍களை திருப்திபடுத்துவது முக்‍கியமல்ல- ஜம்மு காஷ்மீர் மக்‍களை திருப்திபடுத்துவதுதான் மிகவும் முக்‍கியமானது என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் மோசமான நிலவரம், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது- வளர்ச்சித் திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன- 40 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் திரு.குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00