யூடியூப்பில் 150 கோடி பார்வைகளை கடந்து ரவுடி பேபி பாடல் சாதனை : தொடர்ந்து யூடியூப்பில் சாதனை படைத்து வரும் ரவுடி பேபி பாடல்
Sep 23 2023 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் 150 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடிகர் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ரவுடி பேபி பாடல் வெளியான நாளில் இருந்தே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்தது. தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்வித்து வரும் இந்த பாடல் யூடியூப்பில் 150 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.