நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' படத்தின் ரிலீஸ் வெளியீடு : ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகிறது
Jun 8 2023 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இயக்குநர் அஹமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.