விரைவில் மதுரை மாநாடு என தலைமை செயலகம், விஜய் புகைப்படத்துடன் போஸ்டர்களால் பரபரப்பு : மற்ற அரசியல் கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்துள்ள விஜய் மக்கள் இயக்க போஸ்டர்கள்
Jun 5 2023 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விரைவில் மதுரை மாநாடு என தலைமை செயலகம் மற்றும் விஜய் புகைப்படத்துடன் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய், நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிகளின் போது, மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் விஜய், தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை சேகரிக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்துக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், விரைவில் மதுரையில் மாநாடு, மக்கள் ஆட்சி மலரட்டும், தளபதியார் அழைக்கிறார், என விஜய் மற்றும் தமிழ்நாடு தலைமை செயக புகைப்படங்களுடன் மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.